திடீரென போன் போட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. குவிந்த நிவாரணப் பொருட்கள்.. பொதுமக்கள் பாராட்டு.!!

By Raghupati R  |  First Published Dec 9, 2023, 6:32 PM IST

திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது.


டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் தீபக் நாதன் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார். 

ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் முயற்சித்து வருகிறேன் என்றேன். உடனே எண்ணிக்கை விலாசம் கொடுங்கள் , மாலைக்குள் வரும் எனச் சொல்லி, அவரே கதவை திறந்து வழி அனுப்பினார். ஒன்றும் புரியவில்லை எல்லாம் பட படவென நடந்து விட்டது. இன்று 25 லட்சம் மதிப்புள்ள பொருள், எங்கள் அந்தந்த மாவட்ட  பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

புதிய உபகரணங்கள் கேட்டிருந்தோம். அனைத்தும் வரும் என்றார். நான் அரசியல்வாதி தருகிறார் என்றால் , எங்களோடு புகைப்படம் எடுப்பார் , பேசியது வீடியோவாக வரும் என்று நினைத்தேன். இது எதுவும் அவர் செய்யவில்லை. கொடுத்ததைக் கூட அவர் எங்கும் எழுதவில்லலை.

மாற்றுத்திறனாளிகளுடன் இந்நேரத்தில் நிற்கவேண்டும் என்று நினைத்து , அதை உடனே நிறைவேற்றிய அன்புக்கு நன்றி தோழர் ' உதயநிதி ஸ்டாலின்' வேறு என்ன வடிவில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. வலது கை கொடுத்தது , இடது கைக்கு தெரியாத முறை என்பார்கள் ! அப்படியே நிகழ்த்திவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

click me!