சென்னையில் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்..

By Ramya s  |  First Published Dec 9, 2023, 1:08 PM IST

சென்னையில் புயல் பாதித்த இடங்களை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமானநிலையம் வந்த அவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர் ராகுல்நாத் வரவேற்றார். அப்போது தமிழக பாஜக துணை தலைவர் நாராயண திருப்பதி மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டுள்ளார். 

Received a warm welcome at the Chennai Airport by Shri. A.R. Rahul Nadh, DC Chengalpattu, Shri. Sanjay Tyagi, Director and Shri. Narayan Tirupathi VP , along with other karyakartas. pic.twitter.com/WxPRFC3QJD

— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI)

 

Tap to resize

Latest Videos

undefined

பிரதமர் மோடி ஏற்கனவே புயல் நிவாரணத்திற்கு ரூ. 1,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்கியுள்ளார். மேலும், இங்கு நேரில் சென்று நிர்வாகத்தை சந்திக்கவும் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசிடம் இருந்து வேறு ஏதேனும் உதவி தேவை என்றாலும் அதை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். நான் இங்கு என்ன பார்க்கிறேனோ மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பிரதமரிடம் தெரியப்படுத்துவேன். புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு வர தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் சென்னை மக்களுடன் எப்போதும் துணை நிற்பதாகவும் மோடி தெரிவித்தார்.” என்று கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதை தொடர்ந்து சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், முடிச்சூர், பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மிக்ஜாம் புயல் காரனமாக கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. 42 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடைவிடாத தொடர் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. சென்னை மற்றும் புறகர் பகுதிகள் முழுவதுமே தண்ணீரில் தத்தளித்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டது, போக்குவரத்து சேவையும் முடங்கியது.

அத்தியாவசிய பொருட்கள், உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் புறநகர் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடிந்தபாடில்லை. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், தாம்பரம், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

முன்னதாக மிக்ஜாம் புயல் - வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி சென்னை வந்திருந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!