தீபாவளி பண்டிகைக்கு எந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

By manimegalai aFirst Published Oct 22, 2021, 10:27 AM IST
Highlights

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரிகளும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரிகளும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வணிகர்கள், வியாபாரிகள் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் ததும்ப தொடங்கியுள்ளது. ஆனாலும் கனமழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சிவகாசியில் வழக்கமான கொண்டாட்டம் தொடங்கவில்லை. மேலும் பல மாநிலங்களில் பட்டாசுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதும் பட்டாசு உற்பத்தியாளர்கள் அதனை நம்பியிருக்கும் கூலி தொழிலாளர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.

நான்கு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்திற்கு பலன் கிடைக்கும், இந்தாண்டும் தீபாவளியும் மாதத்தின் தொடக்கத்தில் வருவதால் அனைத்து தரப்பினரும் அதிகளவில் பட்டாசுகளை வாங்குவார்கள் என்று சிவகாசி மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதேவேளையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு தயாரிப்பு குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உச்சநீதிமன்றம் கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பட்டாசு வெடிப்பதற்கான நேரம் நிர்ணயம் செய்வது குறித்தும், குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாகவும் முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.

click me!