முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றம்..!

By Asianet TamilFirst Published Oct 20, 2021, 8:43 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைத்ததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
 

 நடிகர் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு ஸ்டாலின் வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதனால், இரண்டு புறமும் இரும்பு தடுப்பை வைத்து போக்குவரத்தை போலீஸார் தடை செய்தனர். அப்போது அந்த வழியாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனம் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்திருந்தார். உள்துறை செயலாளரை பிரபாகரை அழைத்து விளக்கம் கேட்டார்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அவருடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் உள்துறை செயலாளர் பிரபாகரை நீதிமன்றம் நேரில் அழைது, தமிழக  அரசுக்கு பாராட்டு தெரிவித்தது. முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைத்ததற்க்கு நன்றி தெரிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதேவேளையில் முதல்வரின் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் பிரபாகாருக்கு அறிவுறுத்தினார்.

click me!