'அப்பா அம்மா நல்லவர்கள்' கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை

By Velmurugan s  |  First Published Feb 15, 2023, 2:14 PM IST

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவக்கல்லூரி மாணவி தாம் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராமசுப்பு. தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகள் நித்ய ஸ்ரீ. கேகே நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர்கள் சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வந்த நித்ய ஸ்ரீ திடீரென அடுக்கு மாடி குடியிருப்பின் 10வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இந்த விபத்தில் நித்ய ஸ்ரீ படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த அசோக் நகர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்னதாக மருத்துவ மாணவி நித்ய ஸ்ரீ இது தாமாக எடத்துக் கொண்ட முடிவு. எனக்கு கிடைத்த அம்மா, அப்பா மிகவும் நல்லவர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!