தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், டைடல் பூங்கா, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பல்லாவரம்:
பழைய டிரங்க் ரோடு, பழைய மார்க்கெட் ரோடு, போலீஸ் ரெசிடென்சி, மூங்கில் ஏரி, உசைன் பாட்சா தெரு, சிட்லபாக்கம் நூதன் செர்ரி, வெங்கைவாசல், பாரதி நகர், காந்தி நகர், பழனி நகர்.
முகப்பேர் கிழக்கு:
undefined
பாடி புதிய நகர் 1வது தெரு 19வது தெரு, கலைவாணர் காலனி, ஜீவன் பீமா நகர், T.V.S அவென்யூ, திருவள்ளுவர் நகர், மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட்ஸ், தீயணைப்பு துறை ரெசிடென்சி, எம்.ஜி. மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, ஆபிசர் காலனி.
டைடல் பூங்கா:
தரமணி, பெரியார் நகர், வேளச்சேரி, 100 அடி சாலை, அண்ணாநகர், காந்தி நகர், அடையாறு.
போரூர்:
பூந்தமல்லி டிரங்க் சாலை, ஷேஷா நகர், கலைமகர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.