சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. இது தான் காரணமா? வெளியான தகவல்..

Published : Feb 14, 2023, 11:34 AM ISTUpdated : Feb 14, 2023, 11:52 AM IST
சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. இது தான் காரணமா? வெளியான தகவல்..

சுருக்கம்

சென்னை ஐஐடியில் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படித்து வந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஐஐடியில் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படித்து வந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஐஐடியில் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படித்து வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி. இவர் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக தாழ்பாள் போட்டு கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் ஸ்ரீவன் சன்னி வெளியே வராததால் அவரது நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். நீண்ட தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஸ்ரீவன் சன்னி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு சக நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai:சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!

உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர்புரம் போலீசார் ஸ்ரீவன் சன்னி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவரது படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்னியுடன் சேர்ந்த மற்றொரு மாணவர் மாத்திரை உட்கொண்டு   தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க;-  அம்மா சார் என்ன கொடைக்கானலுக்கு கூப்பிட்டு போயி ரூம்ல வச்சு இப்படி பண்ணிட்டாரு.. கதறிய மாணவி.. போக்சோவில் கைது

 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!