4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை..! உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் பலி..!

By Manikandan S R S  |  First Published Feb 26, 2020, 11:19 AM IST

சம்பவத்தன்று தனது 4 வயது மகளுடன் வீட்டு மொட்டை மாடிக்கு திருப்பதி சென்றுள்ளார். அங்கு யாரும் பார்க்காத நேரத்தில் தனது மகளுடன் மேலிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்தனர். 


சென்னை மாதவரத்தில் இருக்கும் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி(35). இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(7) என்கிற மகனும் ஹரிகா(4) என்கிற மகளும் இருக்கின்றனர். சென்னையில் இருக்கும் ஒரு பூண்டு கடையில் விற்பனையாளராக திருப்பதி பணியாற்றி வந்துள்ளார். அவர் சில நாட்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் சம்பவத்தன்று தனது 4 வயது மகளுடன் வீட்டு மொட்டை மாடிக்கு திருப்பதி சென்றுள்ளார். அங்கு யாரும் பார்க்காத நேரத்தில் தனது மகளுடன் மேலிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே இரண்டு பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் மாதவரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 வயது மகளுடன் தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!

click me!