ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மாணவன்..! கல்லூரி வளாகத்தில் பயங்கர அதிர்ச்சி..!

Published : Feb 25, 2020, 04:18 PM IST
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான மாணவன்..! கல்லூரி வளாகத்தில் பயங்கர அதிர்ச்சி..!

சுருக்கம்

ஆவடி அருகே கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். சொந்தமாக ரைஸ்மில் வைத்து தொழில் பார்த்து வருகிறார். இவரது மகன் சுதர்சன். 20 வயது இளைஞரான இவர் ஆவடி அருகே இருக்கும் ஒரு கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார்.

இன்று காலையில் வழக்கம் போல வீட்டில் இருந்து கிளம்பிய அவர் கல்லூரிக்கு சென்றார். அங்கு இரண்டாவது மாடியில் இருக்கும் வகுப்பறைக்கு சக நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இரண்டாவது மாடியில் இருக்கும் தடுப்புச் சுவரை தாண்டி சுதர்சன் மேலிருந்து கீழே விழுந்தார். அதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சுதர்சன் துடிதுடித்து பலியானார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கதறி அழுதனர்.

நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பேராசிரியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்த வந்த காவலர்கள் சுதர்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மாணவனின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் சுதர்சனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாகவே தவறி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும் உண்மையில் சுதர்சன் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!