திடீர் உயர்வில் பெட்ரோல் விலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

By Manikandan S R SFirst Published Feb 23, 2020, 10:24 AM IST
Highlights

நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 05 காசுகள் உயர்ந்து ரூ.74.73 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.27 ரூபாயாக விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் சரிவில் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை தற்போது உயர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் அமெரிக்கா-ஈரான் இடையே நிகழ்ந்து வந்த போர் பதற்றத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் சுட்டு கொன்றது. அதற்கு பதிலடியாக ஈரானில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வந்த பிரச்சனையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்தது. அதன்காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

click me!