ஆவின் பால் பண்ணையில் மிரட்டும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published May 5, 2020, 3:55 PM IST
Highlights

சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 3,500 கடந்துவிட்ட நிலையில், சென்னையில் அதிகபட்சமாக 1724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து ஊருக்கு சென்றவர்களின் மூலம் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல, அம்மா உணவகத்தில் பணியாற்றி ஊழியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல ஊழியர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கு, உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் சுமார் 40 லாரிகள் மூலம் தினசரி சென்னையில் உள்ள பல்வேறு விநியோகஸ்தர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், பால் பண்ணை பகுதியில் வசிக்கும் ஆவின் நிறுவன ஊழியர் இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் மூலம் வேறு யாருக்கேனும்  நோய் பரவி உள்ளதாக என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊழியர்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் ஆவின் பால் பண்ணை இழுத்து மூடும் சூழல் உருவாகி உள்ளது. 

click me!