உயிர் போயிடக்கூடாது காப்பாத்துங்க.. தோளில் தூக்கிச் சென்று இளைஞரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்..Viral Video

By vinoth kumar  |  First Published Nov 11, 2021, 1:55 PM IST

மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நிவாரண பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதிகளிலும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கென கட்டுப்பாட்டு எண்கள் கொடுக்கப்பட்டு மரம் விழுந்தாலோ, வெள்ளத்தில் மாட்டிக்கொண்டாலோ, வீட்டிற்குள் நீர் புகுந்தாலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

அந்த அடிப்படையில் ஒவ்வொரு பகுதிகளிலும் போக்குவரத்து காவலர்களும், சட்ட ஒழுங்கு பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், டி.பி.சத்திரம் பகுதியான கல்லறை பகுதியில் மரம் விழுந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சக காவலர்களுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தார். 

"

அப்போது, கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையில் 3 நாட்களாக பணிபுரிந்திருந்த உதய் என்ற ஊழியர் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி யாருடை உதவியையும் எதிர்பார்க்காமல் தனது தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு அருகில் இருந்த ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்திருக்கிறார். பெண் போலீசாரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு புறம் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

click me!