ஷாக்கிங் நியூஸ்.. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவர் சேர்க்கை.. எம்.பி.களின் பரிந்துரை திடீர் ரத்து.!

By vinoth kumarFirst Published Apr 14, 2022, 8:24 AM IST
Highlights

மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள்  இடஒதுக்கீடு உட்பட அனைத்து சிறப்பு ஒதுக்கீட்டின்  கீழ் மாணவர் சேர்க்கை நடத்துவதை  மறு உத்தரவு வரும்  வரை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கேந்திரிய வித்யாலயா பள்ளி

மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 6 இடங்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு

கடந்த 2016-2017ம் ஆண்டில் இந்த முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 10 மாணவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கலாம் என்று கொண்டு வரப்பட்டது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், தங்கள் தொகுதி எம்.பி.யிடம் அதற்கான பரிந்துரை கடிதத்தை பெற்று, அதனை குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தால் போதும். இந்நிலையில், எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு

இதுதொடர்பாக செகந்திராபாத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மறு உத்தரவு  வரும் வரை சிறப்பு ஒதுக்கீடுகளின் கீழ் எந்த மாணவர்களையும் பள்ளிகளில் சேர்க்க கூடாது என்று அதன் தலைவர் சசிந்திரன் தெரிவித்துள்ளார்.

click me!