TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

Published : Apr 13, 2022, 08:34 AM IST
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

சுருக்கம்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3-ஏ, எப்எல் 3-ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மகாவீர் ஜெயந்தி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த மதுக்கூடங்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3-ஏ, எப்எல் 3-ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

டாஸ்மாக் கடை விடுமுறை

அன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நாளை விடுமுறை என்பதால் குடிமகன்கள் இன்றே சரக்குகளை வாங்கி வைக்க உள்ளனர். இதனால், டாஸ்மாக் கடைகள் முன்பு இன்று கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?