உத்தரவு போட்ட சுப்ரீம்கோர்ட்.. தடுக்கும் ஆளுநரின் ஈகோ.. என்ன செய்ய போகிறார் நீதிபதி- காத்திருக்கும் ட்விஸ்ட்

By Ajmal Khan  |  First Published Mar 22, 2024, 8:27 AM IST

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் கொடுத்த நிலையில், தற்போது வரை பதவி பிரமாணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.


பொன்முடிக்கு செக் வைத்த ஆளுநர்

சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையால் பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் எம்எல்ஏ பதவியை பொன்முடி பெற்றார். பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி குற்றவாளி தான் என தெரிவித்திருந்தார். எனவே அரசியல் சாசனம் படி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

ஆளுநருக்கு எதிராக சீறிய உச்சநீதிமன்றம்

இந்தநிலையில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆளுநரின் செயல்பாட்டிற்கு உச்சநீதிமன்ற தலைமை கடும் கண்டனம் தெரிவித்தது. மாநில அரசு மசோதாக்களின் நிறைவேற்றி அனுப்பினால் கிடப்பில் போடுகிறார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். சட்டமன்ற உறுப்பினருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கேட்டால் அதற்கு மறுக்கிறார் என ஆளுநர் ரவி மீது கடும் விமர்சனம் செய்திருந்தது.  மேலும் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோதமானது என எவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் கூற முடியும்.

முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுகிறாரா?  நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம் என அதிரடியாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து ஆளுநர் ரவி நேற்று சட்டவல்லுநர்களோடு ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இருந்த போதும் தற்போது வரை பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்வது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதாக தெரிகிறது. பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஐ அம் வெயிட்டிங்! துப்பாக்கி பட பாணியில் அண்ணாமலையை சீண்டிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்!

click me!