சென்னையில் நாளை மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

By Velmurugan sFirst Published Mar 21, 2023, 4:42 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையி்ல் போட்டியை காண வசதியாக ரசிகர்களுக்கு இலவச மினி பேருந்து வசதி வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும், 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மைதானம் சீரமைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின்னர் முதல் முறையாக சர்வதேச போட்டி நடைபெறவுள்ளதால் அதனை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இறுதி கட்டத்தை எட்டும் விசாரணை

இந்நிலையில், போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு வசதிப்படுத்தி கொடுக்கும் விதமாக இலவச மினி பேருந்து சேவை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், காலை 11 மணி முதல் போட்டி நிறைவடையும் வரை சென்னை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை ரசிகர்களுக்கு இலவச மினி பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல், நகை பறிப்பு: சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

click me!