வாட்டி வதைத்து வந்த வெயிலுக்கு மத்தியில் திடீர் மழை.. குளிர்ந்த சென்னை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Mar 17, 2023, 11:33 AM IST
Highlights

கோடை தொடங்குவதற்கு முன்னதாவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டடங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், வெளியில் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை தொடங்குவதற்கு முன்னதாவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டடங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், வெளியில் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மதியம் 12 முதல் 3 மணி வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- வேலையை காட்ட ஆரம்பித்த புதிய வைரஸ்.. வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுக்கப்போகும் பள்ளிக்கல்வித்துறை?

இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரண்டு நாட்கள் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொது மக்கள், மின்னல் தாக்கும் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  TN Rain: மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

இந்நிலையில், சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னையில், கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, நுங்கம்பாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களில்  மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது சென்னையில் குளிர்ந்த சூழல் நிலவி வருவததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

click me!