Latest Videos

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த பகுதிகளில் தெரியுமா?

By vinoth kumarFirst Published Jun 15, 2024, 12:52 PM IST
Highlights

பி1 புளியந்தோப்பு போக்குவரத்து சரக காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஸ்டரகான்ஸ் சாலையில் சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி ஜூன் 15 முதல் 17 வரை சோதனை அடிப்படையில் நடைபெற உள்ளது. எனவே ஸ்டரகான்ஸ் சாலையில் அனைத்து வகையான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக சென்னையில் ஸ்டரகான்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பி1 புளியந்தோப்பு போக்குவரத்து சரக காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஸ்டரகான்ஸ் சாலையில் சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி ஜூன் 15 முதல் 17 வரை சோதனை அடிப்படையில் நடைபெற உள்ளது. எனவே ஸ்டரகான்ஸ் சாலையில் அனைத்து வகையான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

முற்றிலும் தடை விதிக்கப்படும் வாகனங்கள்:

1. கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டிமலெஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கு, குக்ஸ் சாலை, குன்னூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகள் வழியாக ஸ்டரகான்ஸ் சாலைக்கு வந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

2. ஸ்டரகான்ஸ் சாலைக்கு இருபுறமும் உள்ள உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்கு நியூ பெரன்ஸ் சாலை செல்லப்பா தெரு ஆகிய சாலைகளை பயன்படுத்தி தங்கள் விரும்பும் இடங்களை அடையலாம்.

மாற்றுப்பாதை: 

அரசு மாநகர பேருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்களுக்கான மாற்றுப்பாதை

* அயனாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டேரி பாலம்- குக்ஸ் சாலை மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை -புளியந்தோப்பு நெடுஞ்சாலை-காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் ரோடு- பேசின் பாலம் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை U turn எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- பேசின் பாலம் அடைந்து மின்ட் செல்லலாம்.

* மின்ட்லிருந்து வரும் வாகனங்கள் - பேசின் பாலம்- பேசின் பவர் ரோடு- காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை-டிமலெஸ் சாலை-ஸ்டாரன்ஸ் சாலை சந்திப்பு டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு- குக்ஸ் சாலை- ஓட்டேரி பாலம்- அடைந்து அயனாவரம் செல்லலாம்.

* பெரம்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு)- மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் ரோடு- பேசின் பாலம் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- U turn- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- பேசின் பாலம் அடைந்து மின்ட் செல்லலாம்.

* மின்ட்லிருந்து வரும் வாகனங்கள் பேசின் பாலம்- பேசின் பாலம்- பேசின் பவர் ரோடு காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ் சாலை- ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பு டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு-பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு) அடைந்து அயனாவரம் செல்லலாம்.

* அயனாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டேரி பாலம்-பிரிக்கிளின் சாலை- புரசைவாக்கம் நெடுஞ்சாலை அடைந்து டவுட்டன் செல்லலாம்.

* டவுட்டனிலிருந்து வரும் வாகனங்கள்- புரசைவாக்கம் நெடுஞ்சாலை- வெள்ளால தெரு- டாக்டர் அழகப்பா சாலை - மில்லர் ரோடு- பிரிக்கிளின் சாலை- ஓட்டேரி பாலம் -கொன்னுர் நெடுஞ்சாலை அடைந்து அயனாவரம் செல்லலாம்.

* பெரம்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை- குக்ஸ் சாலை- ஓட்டேரி பாலம்-பிரிக்கிளின் சாலை- புரசைவாக்கம் நெடுஞ்சாலை அடைந்து டவுட்டன் செல்லலாம்.

* டவுட்டனிலிருந்து வரும் வாகனங்கள்- புரசைவாக்கம் நெடுஞ்சாலை- வெள்ளால தெரு- டாக்டர் அழகப்பா சாலை - மில்லர் ரோடு- பிரிக்கிளின் சாலை- ஓட்டேரி பாலம்-குக்ஸ் சாலை- அடைந்து அயனாவரம் செல்லலாம்.

* அயனாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டேரி பாலம்- குக்ஸ் சாலை-மேட்டுப்பாளையம் சந்திப்பு - ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை-காந்தி நகர் ரவுண்டானா- பேசின் யானைக்கவுனி சாலை-சூளை ரவுண்டானா- சூளை நெடுஞ்சாலை- EVK சம்பத் சாலை- வேப்பேரி நெடுஞ்சாலை- ராஜா முத்தையா சாலை அடைந்து சென்ட்ரல் செல்லலாம்.

* சென்ட்ரல்லிருந்து வரும் வாகனங்கள் ராஜா முத்தையா சாலை- சூளை ரவுண்டானா- பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ் சாலை- ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பு டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு-குக்ஸ் சாலை- ஓட்டேரி பாலம்-குன்னர் நெடுஞ்சாலை அடைந்து அயனாவரம் செல்லலாம்.

*  பெரம்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை- மேட்டுப்பாளையம் சந்திப்பு ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை-காந்தி நகர் ரவுண்டானா பேசின் யானைக்கவுனி சாலை- சூளை ரவுண்டானா- சூளை நெடுஞ்சாலை- EVK சம்பத் சாலை- வேப்பேரி நெடுஞ்சாலை- ராஜா முத்தையா சாலை அடைந்து சென்டரல் செல்லலாம்.

*  சென்ட்ரல் லிருந்து வரும் வாகனங்கள் ராஜா முத்தையா சாலை- சூளை ரவுண்டானா- பேசின் யானைக்கவுனி சாலை- டிமலெஸ் சாலை- ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பு - டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை - ஸ்டீபன்சன் சாலை (செங்கை சிவம் பாலம்)- மேட்டுப்பாளையம் சந்திப்பு-பெரம்பூர் நெடுஞ்சாலை அடைந்து அயனாவரம் செல்லலாம்.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை

* சென்டரல் லிருந்து வரும் கனரக வாகனங்கள் இரு வழிப்பாதையாக- ராஜா முத்தையா சாலை-சூளை ரவுண்டானா- பேசின் யானைக்கவுனி சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் சாலை- பேசின் பாலம்- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- வியாசர்பாடி மேம்பாலம்- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை-GNT சாலை- மூலக்கடை அடைந்து பெரம்பூர் மாதவரம் செல்லலாம்.

* டபுட்னிலிரூந்து வரும் கனரக வாகனங்கள் இருவழிப்பாதையாக -அன்டர்ஸ் சாலை- சூளை நெடுஞ்சாலை-சூளை ரவுண்டானா- பேசின் யானைக்கவுனி சாலை- காந்தி நகர் ரவுண்டானா பேசின் பவர் சாலை- பேசின் பாலம்- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- வியாசர்பாடி மேம்பாலம்- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை-GNT சாலை- மூலக்கடை அடைந்து பெரம்பூர்' மாதவரம் செல்லலாம்.

உள்ளூர் குடியிருப்புவாசிகள் வாகன இயக்கங்களுக்கான மாற்றுப்பாதை

உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்காக நியூபெரான்ஸ் சாலை, செல்லப்பா தெரு, அவதான பாப்பையா சாலை, சுப்பா சாலை, ரங்கையா சாலை, அஸ்டபுஜம் சாலை, வடமலை சாலை, தானா சாலை, மூக்கு சாலை, மாணிக்கம் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தி தங்கள் விரும்பும் இடங்களை அடையலாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

click me!