சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர்.. டிரான்ஸ்பார்மரில் அந்தரத்தில் தொங்கிய உடல்!

Published : Jun 15, 2024, 09:27 AM IST
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர்.. டிரான்ஸ்பார்மரில் அந்தரத்தில் தொங்கிய உடல்!

சுருக்கம்

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதுரை (50). இவர் தாம்பரம் அருகே படப்பை மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார்.

சென்னை அடுத்த படப்பையில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதுரை (50). இவர் தாம்பரம் அருகே படப்பை மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள எம்பயர் அவன்யூ என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்கும் பணியில் கங்காதுரை ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் டிரான்ஸ்பார்மரிலேயே துடிதுடித்து உயிரிழந்து அந்தரத்தில் உடல் தொங்கிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மணிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடேன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து கங்காதுரை உடலை மீட்டனர். 

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!