கொரோனா கொடூரத்தின் முக்கியமான 3 மற்றும் 4 வது வாரம்..! எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை..!

By Manikandan S R SFirst Published Mar 21, 2020, 4:22 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பரவுவதன் முதல் மாதம் மிக முக்கியமானது. முதல் இரண்டு வாரங்களில் சாதாரணமாக இருக்கும் வைரஸ் பரவுதல் 3 மற்றும் 4 வது வாரங்களில் மிக கடுமையாக பரவும். இதற்கு முன்பாக கொரோனா கோர தாண்டவம் ஆடிய நாடுகளில் 3 மற்றும் 4 வாரங்களில் தான் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

உலகையே ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுத்திருக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரையிலும் 271 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில்  பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.  நாளை தேசிய சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதன்படி நாளை பொது போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் சுய ஊரடங்கை அரசு அறிவித்திருக்கிறது. பொது இடங்களில் வைரஸின் ஆயுள்காலம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், ஒருவேளை மக்கள் கூடும் இடங்களில் அவை இருந்தால் நாளை யாரும் தொடாமல் இருக்கும்பட்சத்தில் 12 மணி நேரத்தில்  அது உயிரற்றதாக மாறிவிடும். அதன்காரணமாகவே மக்கள் அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதன் முதல் மாதம் மிக முக்கியமானது. முதல் இரண்டு வாரங்களில் சாதாரணமாக இருக்கும் வைரஸ் பரவுதல் 3 மற்றும் 4 வது வாரங்களில் மிக கடுமையாக பரவும். இதற்கு முன்பாக கொரோனா கோர தாண்டவம் ஆடிய நாடுகளில் 3 மற்றும் 4 வாரங்களில் தான் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது எதிர்கொள்ள இருப்பது மூன்றாவது வாரம். எனவே தான் அதற்கு முன்பாக பொது இடங்களில் இருக்கும் வைரஸ் செயலிழக்க செய்து விட்டால் தொற்று நோய் பரவுதலை பின்வரும் நாட்களில் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

பொதுமக்கள் இனியும் அலட்சியம் காட்டாமல் அரசு கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனவை வெற்றி கொள்ள முழு ஒத்துழப்பையும் அளிக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தொடர்ந்து உயிரை பணயம் வைத்து செயல்படும் மருத்துவ துறையினர், தூய்மை பணியாளர்கள், சுகாதார துறையினர், ஒட்டுமொத்த அரசு நிர்வாகம், நொடிக்கு நொடிக்கு தகவல்களை கொண்டு சேர்க்கும் ஊடக பணியாளர்கள் ஆகியோரை உங்கள் பிராத்தனைகளில் நிறுத்தி கொள்ளுங்கள்.
 

click me!