மேட்டர் ரொம்ப சீரியஸ்... ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க... பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் விஜயபாஸ்கர்..!

By vinoth kumarFirst Published Mar 21, 2020, 1:48 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்த 32 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி விடுமுறையை சுற்றுலாவிற்கான விடுமுறை போன்று கருதக்கூடாது. விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் மத்திய அரசு, மாநில அரசு  சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்;- தமிழகம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்த 32 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி விடுமுறையை சுற்றுலாவிற்கான விடுமுறை போன்று கருதக்கூடாது. விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் மத்திய அரசு, மாநில அரசு  சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கை, மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். வளர்ந்த நாடுகளில் மிகவும் சவாலாக உள்ள விஷயத்தை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பது தான் முக்கியமான விஷயம். கொரோனா சவாலை எதிர்கொள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கும் அழைப்பு விடக்கப்பட்டுள்ளது.  

மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி இளைஞருடன் தொடர்பில் இருந்த 163 பேர் தனிமைப்படுப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்த 94 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். 

click me!