ஊரடங்கு நாளிலும் ஓயாத ஒரே இடம்..! உணவுக்கு கவலையில்லை..!

By Manikandan S R SFirst Published Mar 21, 2020, 12:45 PM IST
Highlights

ஏழை எளிய மக்கள், வெளி உணவுகளை நம்பியிருப்பவர்களுக்காக மார்ச் 22ம் தேதி அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 271 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

22ம் தேதி மாலை 5 மணி அளவில் மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில் நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து மா நிலங்களில் சுய ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  நாளை தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் மூடப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் ஞாயிற்றுக் கிழமை பால் விநியோகத்தை நிறுத்தி இருக்கிறது.

உயிரை விட உரிமையே முக்கியம்..! ஊரடங்கு நாளிலும் தொடரப்போகும் ஷாகின்பாக் போராட்டம்..!

 

இந்த நிலையில் நாளை அம்மா உணவகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மக்கள் தேவையற்ற உள்ளூர் பயணங்களை நாளை தவிர்க்க வேண்டும் என்றும் ஏழை எளிய மக்கள், வெளி உணவுகளை நம்பியிருப்பவர்களுக்காக மார்ச் 22ம் தேதி அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்றார். மேலும் குறுகிய நேரத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

11,384 உயிர்களை குடித்து கோர தாண்டவம் ..! உலகை உலுக்கி எடுக்கும் கொரோனா..!

click me!