மழை நீரில் மூழ்கிய வீடுகள்.. படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Nov 11, 2021, 5:18 PM IST
Highlights

சென்னையில் மழை என்றாலே தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நினைப்பது மக்களின் எண்ணம். ஆனால், வடசென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளும் மழையில் பாதிக்கப்படுவது வாடிக்கைதான்.

சென்னை கொளத்தூரில் மழை நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து மக்கள் படகு மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் மழை என்றாலே தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நினைப்பது மக்களின் எண்ணம். ஆனால், வடசென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளும் மழையில் பாதிக்கப்படுவது வாடிக்கைதான்.

இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 4 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் கிட்டதட்ட 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியும், சில இடங்களில் ஆறுபோல் பெருக்கெடுத்தும் ஓடுகிறது. மழை நீர் வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை இடைவிடாமல் பெய்து வருவதால் வெள்ளம் வடிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், கொளத்தூரில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து இருப்பிடங்களை இழந்து வெள்ளத்தில் தத்தளித்த மக்கள் அனைவரும் ரப்பர் படகு மூலம் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல், கோவிலம்பாக்கத்தில் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உணவு, மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாதவரம் தணிகாச்சலம் தெருவில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த 62 வயது முதாட்டி யமுனாதேவி  இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் உதவ யாருமின்றி வீட்டிலேயே தவித்து வந்துள்ளார். இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பேரிடம் மீட்பு குழுவினர் அவரை வீட்டிலிருந்து தூக்கி வந்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று பெரம்பூர் பகுதியில் வசிக்கும் அவருடைய உறவினர் வீட்டில் பத்திரமாக ஒப்படைத்தனர். 

click me!