உஷார்.. தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.. பிரசாரம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தல்..!

By vinoth kumarFirst Published Mar 31, 2021, 3:25 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்பதால், பிற்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்பதால், பிற்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய  இயக்குநர் புவியரசன் கூறுகையில்;- வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசத்தொடங்கியுள்ளதால் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறினார். இன்னும் நான்கு முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 டிகிரியில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். 

இதுபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை உயரும். ஆகையால், தேர்தல் பிரசாரம் செய்யும் வேட்பாளர்களும் கூட்டத்திற்கு செல்பவர்களும் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் வலியுறுத்தயுள்ளது. 

click me!