உஷார் மக்களே.. தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்.. தயவு செய்து மாஸ்க் அணியுங்கள்.. சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை.!

By vinoth kumarFirst Published Mar 31, 2021, 2:07 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருகிறது. போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவை செய்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். கோயில் நிகழ்ச்சி கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.

கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருகிறது. போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவை செய்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். கோயில் நிகழ்ச்சி கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.

மதக்கூட்டம், உள்அரங்க நிகழ்வுகள் அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவி வருகிறது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க வருபவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறப்பு வகிதம் குறைவாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை. ஆனாலும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தற்போது 1,124 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். மொத்த படுக்கைகள் 4,368 ஆக  உள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என   சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

click me!