#BREAKING ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... தமிழக அரசு அறிவிப்பு...!

By vinoth kumarFirst Published Mar 31, 2021, 1:36 PM IST
Highlights

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியது. இதனையடுத்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம்  தொடக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத்  தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2000ஐ  தாண்டி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனாவை தடுக்க வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!