தேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா..? உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!

By Asianet TamilFirst Published Feb 27, 2020, 10:30 PM IST
Highlights

“தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் அமல்படுத்துவதில்லை? டாஸ்மாக் கடைகள் எங்கே அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன.  இருந்தாலும், வருங்கால தலைமுறையினரின் நலன் கருதி சில விதிகளையும் கொண்டு வரலாம்” எனத் தெரிவித்தது..
 

தேர்தல் அறிக்கையில் மட்டும்தான் மதுவிலக்குக் கொண்டுவரப்படுமா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் இடமாற்றம் தொடர்பான வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம். “தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் அமல்படுத்துவதில்லை? டாஸ்மாக் கடைகள் எங்கே அமைக்க வேண்டும் என விதிகள் உள்ளன.  இருந்தாலும், வருங்கால தலைமுறையினரின் நலன் கருதி சில விதிகளையும் கொண்டு வரலாம்” எனத் தெரிவித்தது..


இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “கிராம பஞ்சாயத்து கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படுவது இல்லை. அதனால் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு அதிகாரம் இல்லை ” என்று வாதாடினார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம், “ மதுக்கடைகளை அமைப்பது தொடர்பாக டாஸ்மாக் நிறுவன சுற்றிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு விதிகளை கொண்டுவர உத்தரவிட்டு” விசாரணையை ஆறு வார காலத்துக்கு ஒத்திவைத்தது.

click me!