இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை..! குளிர்ந்தது சென்னை..!

By Manikandan S R SFirst Published Apr 26, 2020, 7:44 AM IST
Highlights

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலில் சிக்கித்தவித்து வந்த சென்னைவாசிகளுக்கு திடீர் மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை கொட்டித் தீர்க்கிறது.

ஆவடி, அம்பத்தூ,ர் திருமுல்லைவாயல், பட்டாபிராம் ஓ.எம்.ஆர், அடையார், சாந்தோம், மந்தவெளி, மைலாப்பூர், மெரினா, ராயப்பேட்டை, திருவல்லிகேணி, சேப்பாக்கம், துறைமுகம், மண்ணடி, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மணலி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலில் சிக்கித்தவித்து வந்த சென்னைவாசிகளுக்கு திடீர் மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து நகரின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கியும், அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமலும் சாய்ந்துள்ளன.

click me!