48 மணிநேரத்திற்கு சென்னையில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

Published : Nov 30, 2019, 12:19 PM ISTUpdated : Nov 30, 2019, 12:25 PM IST
48 மணிநேரத்திற்கு சென்னையில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக  தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தென் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்  விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 'நான் நெருப்பு டா..நெருங்குடா'..! புதிய வீடியோவில் அதிர வைக்கும் நித்யானந்தா..! பரவசத்தில் சீடர்கள்..!


 
வங்கக்கடலில் சூறைக்காற்று வீச இருப்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பகுதியில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் மிக கனமழையும் 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  கொலையில் முடிந்த ரூபாய் 125 கடன்..! பீர் பாட்டிலை உடைத்து நண்பரை கொடூரமாக குத்திக்கொன்ற தொழிலாளி..!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!