11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

Published : Oct 24, 2019, 01:12 PM ISTUpdated : Oct 24, 2019, 01:17 PM IST
11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களில் பருவமழை தீவிரமடையும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, வங்கக்கடல், அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பலத்த காற்று வீச இருப்பதால் மீனவர்கள் ஆந்திரா மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

இதையும் படிங்க: பெற்ற தாயை உலக்கையால் அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..! கடன் அடைக்க பணம் தராததால் வெறிச்செயல்..!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு