ரூ.20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ்... அலேக்கா தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..!

By vinoth kumarFirst Published Oct 23, 2019, 5:33 PM IST
Highlights

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்களுக்கிடையே இடம் சம்பந்தமாக பஞ்சாயத்து இருந்துள்ளது. இந்த விவகாரம் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகனிடம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், எதிர்தரப்பை அழைத்து கட்டப் பஞ்சாயத்து பேசிய குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் அவர்களை மிரட்டியுள்ளார். அவர்களிடம் ரூ.1 லட்சம் வரை லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையும் படிங்க;- 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்துடன் நீங்கள் காவல் நிலையத்துக்கு வரவேண்டாம், அண்ணா நகர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- 

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் அளித்தவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அப்போது திட்டமிட்டபடி ரூ.20 ஆயிரம் பணத்துடன் அண்ணா நகர் காவலர் குடியிருப்புக்குச் சென்றார். பணத்தைக் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகனை பணத்துடன் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். 

click me!