நாளைக்கே போட்டுக்கங்க… இல்லைன்னா கிடைக்காது.. தடுப்பூசி குறித்து அமைச்சர் மா.சு. வெளியிட்ட முக்கியத் தகவல்…!

By manimegalai aFirst Published Sep 25, 2021, 11:32 AM IST
Highlights

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் முதலமைச்சரின் விரிவான  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் 108 அவசரகால ஊர்தி மேலாண்மை சேவை ஆண்டு விழா நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில் 108 அவசர கால ஊர்தியின் சேவையின் கண்காட்சியை தொடங்கி வைத்து அவசர கால ஊர்தி பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

திங்கட்கிழமை தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை தடுப்பூசி முகாம் செயல்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 108 அவசர கால ஊர்தி சேவை மூலம் இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் நபர்கள் 108  பயனடைந்துள்ளனர். 542 வாகனம் சிறப்பு வாகன பணியில் உள்ளதாக தெரிவித்தார்.

நாளை மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 20 ஆயிரம் முகாம் 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். கையிருப்பில் உள்ள தடுப்பூசி அனைத்தையும் மாவட்டம் வாரியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ள 22 லட்சம் பேர் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

10 நாட்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாகும் என்றும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவுள்ளதால் திங்கட்கிழமை தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அன்று முகாம்கள் செயல்படாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!