காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறைகளே இருக்கக் கூடாது… சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு…!

By manimegalai aFirst Published Sep 24, 2021, 9:24 PM IST
Highlights

காவல்துறையில் பணியாற்றுபவர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்களை நடத்தும்படி காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் பணியாற்றுபவர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்களை நடத்தும்படி காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக வரும் 30 மற்றும் அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் காவல் கண்காணிப்பாளர்கள் ,காவல் ஆணையர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் சிறப்பு முகாம்களை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளைக் களைவது குறித்து கீழ்கண்ட நாட்களில் காவலர்களின் குறைதீர்க்கும் முகாம் நடத்த 30.9.21 வியாழக் கிழமை அன்று காவல் கண்காணிப்பாளர்கள் ,காவல்துறை துணை தலைவர்கள், காவல் ஆணையர்கள், காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்களை நடத்த வேண்டும்.

15.10.21 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தலைவர்கள் குறை தீர்க்கும் முகாம்கள  நடத்த வேண்டும். காவல்துறை தலைமை இயக்குனர்30.10.21 சனிக்கிழமை அன்று காவலர் குறை தீர்க்கும் முகாம் நடத்துவார். அதற்கு முன்னதாக மேற்கண்ட தேதிகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி அதில் தீர்க்கப்படாத காவலர்களின் குறைகளை மனுவாக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு 25.09.21க்குள் அனுப்ப வேண்டும்.

காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்பான அறிவிப்புகளை அனைத்து காவலர்களின் பார்வைக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தி முடித்த பின்பு 1.10.21 மற்றும் 16.10.21 ஆகிய தேதிகளில் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை, குறைதீர்க்க பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு

dgptngenonesection@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!