மக்கள் தங்குவதற்கு பள்ளிகளை திறந்து வையுங்கள்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

By vinoth kumarFirst Published Nov 7, 2021, 4:38 PM IST
Highlights

ஒரே இரவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னையின் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ளதால் உணவு இல்லாமலும், தங்குவதற்கு இடமில்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாக திறந்து வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒரே இரவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னையின் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ளதால் உணவு இல்லாமலும், தங்குவதற்கு இடமில்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவை வழங்கினார். மேலும், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகளில் தங்க வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாக திறந்துவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள கணினி உள்ளிட்ட மின்னனுக் கருவிகளை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் துரிதகதியில் பணிகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

click me!