#BREAKING கல்பாக்கம் கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய தடையில்லை... வெளியானது அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 4:57 PM IST
Highlights

ஆனால் இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்ததோடு, அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு குரல் தெரிவிக்கும் அளவிற்கு பலமான பிரச்சனையாக மாறியது. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 4 வரையறை எல்லையில் உள்ள குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட நிர்வாகம் அரசாணை வெளியிட்டது. 


பல்லவர்களின் மாமல்லபுரம், டச்சுக்காரர்களின் பழமையான துறைமுகமாக திகழ்ந்த சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம், ஆகிய 14 க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில், மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஆனால் இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்ததோடு, அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு குரல் தெரிவிக்கும் அளவிற்கு பலமான பிரச்சனையாக மாறியது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்தனர். மேலும் புதுப்பட்டினம் உள்ளிட்ட சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் பகிரங்க அறிவிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 


இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள், பேரூராட்சிகளில் பத்திர பதிவுக்கு ஆட்சேபனையில்லை என தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப் பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!