Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 23, 2022, 12:25 PM IST
Highlights

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவிய நிலையில் அமைச்சர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவிய நிலையில் அமைச்சர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். 

திமுக எம்‌எல்‌ஏ பரந்தாமன் கேள்வி

Latest Videos

சட்டப்பேரவையில்‌ கேள்வி நேரத்தின் போது எழும்பூர்‌ திமுக எம்‌எல்‌ஏ பரந்தாமன்‌;- திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள்‌ பெறுவதற்காக விண்ணப்பிக்‌கப்பட்ட மனுக்கள்‌ எத்தனை, வழங்கிய கார்டுகள்‌ எத்தனை? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி;- திமுக அரசு பொறுப்பேற்றால், குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றவுடன், 2021 மே மாதம் முதல் கடந்த 14ம் தேதி வரை 10  மாதங்களில் 15,74,543 விண்ணப்பங்கள் குடும்ப அட்டை வழங்க கோரி பெறப்பட்டது. இது பரிசீலிக்கப்பட்டு பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10,92,064  பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கி சாதனை படைத்திருக்கிறது.

அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

தொடர்ந்து, எழும்பூர் பெரியமேடு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் முதியோர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க பிஓஎஸ்-ஐ சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?  என்று எம்எல்ஏ பரந்தாமன் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் சக்கரபாணி: பிராக்ஸி முறைக்கு சென்று பொருட்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்படும். மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், அவர்தம் பிரதிநிதிகள் வாயிலாக இன்றியமையா பண்டங்களை நியாய விலை கடைகளில் இருந்து பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் (குடிமை பொருள் வழங்கல்) ஆகியோர் மூலமாக அங்கீகார சான்று வழங்கப்பட்டு வருகிறது. 

அவர்கள்  குடும்பத்தில் 5 வயதுக்கு மேற்பட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். விரல் ரேகை தேய்மானம் காரணமாக விரல் ரேகை சரிபார்ப்பு முறையை செயல்படுத்த இயலாத நேர்வில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி இன்றியமையா பண்டங்கள் விநியோகிக்க உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

ஓஏபி வாங்குபவர்களுக்கு ரேஷன் அட்டை ரத்தா?

மேலும், ‘முதியோர் ஓய்வூதியத்தொகை (ஓஏபி) வாங்குகிறவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படுமா? என்று திமுக எம்‌எல்‌ஏ பரந்தாமன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி,‘‘அப்படி எல்லாம் இல்லை. அவர்களுக்கும் அரசாங்கத்தின் மூலமாக பொருட்கள், 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவிய நிலையில் அமைச்சர் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!