Chennai Bike Race: வீலிங் செய்து பைக் ரேஸில் ஈடுபட்டவர்களுக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்..!

By vinoth kumarFirst Published Mar 21, 2022, 11:15 AM IST
Highlights

சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் பைக் ரேஸில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, 4 உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மெரினா காமராஜ் சாலையில் மார்ச் 18ம் தேதி இரவு பைக் ரேஸில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மத்துல்லா, கல்லூரி மாணவர் முகமது உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பைக் ரேஸ்

சென்னையில் மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ரேஸில் ஈடுபவர்களை மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் அரங்கேறின. இதன்காரணமாக பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து பைக் ரேஸ் சம்பவங்கள் குறைந்தது. 

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் பைக் ரேஸில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, 4 உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

போலீஸ் கைது

அதன்படி வீலிங் செய்தவர்களின் வாகன பதிவெண்கள் கொண்டு கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பைக் ரேஸ் செய்த 5 பேரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் ஜவஹர் பீட்டர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடம் இருந்தும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

click me!