நரம்பு மண்டல பிரச்சனையால் மனநலம் பாதிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்.. அதிமுக போலீசில் பரபரப்பு புகார்.!

Published : Mar 22, 2022, 06:30 AM IST
நரம்பு மண்டல பிரச்சனையால் மனநலம் பாதிக்கப்பட்ட  நாஞ்சில் சம்பத்.. அதிமுக போலீசில் பரபரப்பு புகார்.!

சுருக்கம்

 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென மூளையிலுள்ள நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டாபர். பின்னர் சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

திமுகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால் அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக டிஜிபி அலுவலகத்தில் புகார்

அதிமுகவின் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- "கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழக முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத் அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், குறித்து அவதூறு செய்யும் நோக்கில் உள்நோக்கத்தோடு அநாகரிகமாக பேசியது சட்டப்படி தவறு.

இதையும் படிங்க;- அடுத்த டார்கெட் எடப்பாடிதான்.. பிப்ரவரி 19ம் தேதிக்கு பிறகு பாருங்க.. டுவிஸ்ட் வைக்கும் நாஞ்சில் சம்பத்.!

அநாகரிகமாக பேசும் நாஞ்சில் சம்பத் 

கடந்த 2017-ம் ஆண்டு பல்லாவரம் காவல் நிலையத்தில் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாஞ்சில் சம்பத் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் தலைவர்களை அநாகரிகமாக பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்று அவதூறாக எவரையும் பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தார். தற்போது வழக்கு விசாணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற அநாகரிகமான முறையில் இனி பேசுவதில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த நாஞ்சில் சம்பத் தற்போது உறுதிமொழிக்கு எதிராக நடந்து வருகின்றார்.

மூளை நரம்பு மண்டல பாதிப்பு

மேலும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென மூளையிலுள்ள நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டாபர். பின்னர் சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் பார்க்கும் போது அவருக்கு நரம்பு மண்டல பிரச்சனையினால் மனநலமும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆகையால், நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளும் எந்த பொதுக் கூட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி அளிக்கக்கூடாது என இன்பதுரை தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!