சென்னையில் மார்ச்.25 வரை டிரோன்கள் பறக்கத் தடை... ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி உத்தரவு!!

By Narendran SFirst Published Mar 22, 2023, 9:58 PM IST
Highlights

சென்னையில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெற உள்ள நிலையில் வரும் மார்ச் 25 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 

சென்னையில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெற உள்ள நிலையில் வரும் மார்ச் 25 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதை அடுத்து இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: தள்ளாடும் தமிழகம் - ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்: அண்ணாமலையின் பட்ஜெட் அலசல்

அந்த வகையில் சென்னை கிண்டியில் 2 ஆவது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி வரும் மார்ச்.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொள்கின்றனர். இவர்கள் கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல், ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகள் பெற்ற 5 தமிழர்கள்!

இதன் காரணமாக வரும் மார்ச்.25 ஆம் தேதி வரை இவர்கள் தங்கி உள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே அந்த பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

click me!