சென்னை சாந்தோமில் அடிக்குமாடி கட்டிடத்தில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் வங்கியும், மற்ற இரண்டு தளங்களில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சென்னை சாந்தோமில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
சென்னை சாந்தோமில் அடிக்குமாடி கட்டிடத்தில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் வங்கியும், மற்ற இரண்டு தளங்களில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அபாய ஒளி ஒளித்திருக்கிறது. உடனே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இந்த தீ விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
undefined
இந்த தீ விபத்தால் ஏசி, கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.