தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, ஐடி காரிடர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆவடி பகுதி:
பட்டபிராம் சி.டி.எச் ரோடு, சேக்காடு, ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர், வி.ஜி.வி நகர் முழுவதும், மார்டன் சிட்டி, டிரைவர்ஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
undefined
ஐடி காரிடர் பகுதி:
தரமணி கொட்டிவாக்கம் 2வது பிரதான சாலை நேரு நகர், 3வது பிரதான சாலையின் ஒரு பகுதி (ராயல் என்ஃபீல்டு நிறுவனம்)
மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.