தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல்,டீசல் விலை..! வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி..!

By Manikandan S R SFirst Published Mar 14, 2020, 11:28 AM IST
Highlights

இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய் முதல் 8 ரூபாயாகவும் டீசல் விலை 4 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியும் லிட்டருக்கு ரூ1-ல் இருந்து ரூ10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கலால் வரி தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய் முதல் 8 ரூபாயாகவும் டீசல் விலை 4 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியும் லிட்டருக்கு ரூ1-ல் இருந்து ரூ10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சியை ஈடுகட்டவே விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து..! 6 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி..!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 14 காசுகள் குறைந்து ரூ 72.57 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை 17 காசுகள் குறைந்து ரூ 66.02 ரூபாயாக விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் சரிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!