அச்சுறுத்தும் கொரோனா..! சென்னை விமானங்கள் அதிரடி ரத்து..!

By Manikandan S R S  |  First Published Mar 9, 2020, 12:19 PM IST

கொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்டதால் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,119 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.

Latest Videos

undefined

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

கொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்டதால் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் செல்லும் பத்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பயணிகள் வருகை குறைவானதே அடுத்து ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய விமானங்கள் ரத்தாகி இருக்கின்றன.

இதனிடையே சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக விமான நிலைய வளாகத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

click me!