கொரோனாவால் பீதியில் உறைந்த தமிழகம்... அமைச்சர் விஜயபாஸ்கரின் ஒரே வார்த்தையால் பொதுமக்கள் ஆறுதல்..!

By vinoth kumarFirst Published Mar 9, 2020, 12:26 PM IST
Highlights

காய்ச்சலுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரானா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என 
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

அமெரிக்காவில் இருந்து திரும்பிய 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 

சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதுவரை உலக முழுவதும் 3700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை 42 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர் ஒருவருக்கு கொரானா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய குடும்பத்தில் இருந்த 27 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் கொரானா பாதிக்கப்பட்ட பொறியாளரின் மனைவிக்கு, கொரானா தொற்றியிருக்கிறதா என மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு கொரானா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, காய்ச்சலுடன் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரானா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

click me!