சென்னையில் நாளை நடைபெற உள்ள சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வில் 593 பேர் பங்கேற்கின்றனர்.
சென்னையில் நாளை நடைபெற உள்ள சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வில் 593 பேர் பங்கேற்கின்றனர். முன்னதாக தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்.21 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஆண்கள் 327 பேர், பெண்கள் 266 பேர் அடங்குவர்.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.. ஜாக்டோ ஜியோ கோரிக்கை !!
சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு பிப்.13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை (பிப்.13) கணினி வழி தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு 12.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு முடிந்த பிறகு அதே நாள் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் இரண்டால் தாள் தேர்வு மாலை 5.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் !!
சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வை 593 பேர் எழுதுகின்றனர். முதல் தாளில் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களும் இரண்டாம் தாளில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்முக தேர்வு மற்றும் ஆவணங்களுக்கு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 510 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.