இருசக்கர வாகனம் பீட்டர்ஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் மீது உரசியது.
சென்னையில் மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா(22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனம் பீட்டர்ஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் மீது உரசியது. இதனால், நிலைதடுமாறி பின்னால் அமரந்து இருந்த பிரியங்கா கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் இவர் படுகாயமடைந்தார். இதில் பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
undefined
உடனே இந்த விபத்தை அறிந்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரியங்கா சிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை தேடிவருகின்றனர். சென்னையில் மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.