சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து நாளை முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. மேலும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி, பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பெண்கள்; ம.பி.யில் நடந்த குலை நடுங்க செய்யும் கொடூரம்
undefined
இந்நிலையில் தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி நாளை முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். மாறாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (27, 28 தேதிகளில்) ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும். மேலும் ஏற்கனவே குறிப்பிட்டபட்டது போல் நாளை முதல் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேவைக்கு ஏற்ப மாநகர அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.