திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து நின்றதால் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து நின்றதால் 4 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. என்ன காரணம் தெரியுமா?
இந்த விபத்து காரணமாக புறநகர் மின்சார ரயில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி அன்னனுர் அருகே ரயில் விபத்தால் அந்த மார்க்கத்தில் உள்ள விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டது. சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் கோவை விரைவு ரயில் பட்டரைவாக்கத்திலும், மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் அம்பத்தூரை அடுத்த அன்னனூர் ரயில் நிலையத்திலும், திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் 6.20 மணிக்கு செல்லும் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் 7.25 மணிக்கு புறப்பட வேண்டியது சென்ட்ரலில் நிறுத்தப்பட்டுள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது ரயில் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா என ஆவடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- திருவண்ணாமலை.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார் மற்றும் அரசு பேருந்து - பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!