கொரோனாவே கருப்பு பூஞ்சையாக உருமாறுகிறதா? மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published May 28, 2021, 2:38 PM IST

தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார். 


தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார். 

சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள். கண்ணில் வீக்கம், ரத்தம் வடிதல், மூக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்புகள், மயக்கம் போன்றவை கருப்பு பூஞ்சை பாதிப்புக்கான அறிகுறிகளாகும். 

Latest Videos

undefined

கொரோனா வருவதற்கு முன்பே கருப்பு பூஞ்சை பாதிப்பு இருக்கிறது. இது புதிய நோய் அல்ல. கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கருப்பு பூஞ்சை பாதிப்பை கட்டுப்படுத்த 13 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்றார்.

இதனையடுத்து, தமிழக அரசின் குழுவில் உள்ள இஎன்டி வல்லுநர் மோகன் காமேஸ்வரன் கூறுகையில்;- கொரோனா பாதிப்பே உருமாறி கருப்பு பூஞ்சையாக மாறுகிறதா என கண்டறிய வேண்டியுள்ளது. கொரோனாவின் முதல் அலையில் யாருக்கும் கருப்பு பூஞ்சை கண்டறியப்படாததால் சந்தேகம் ஏற்படுகிறது. மூக்கடைப்பு, முகத்தில் வலி இருந்தால் அருகிலுள்ள காது, மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரை அணுகலாம்.  கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள். நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

click me!