கொரோனாவிற்கே ஏய்ப்பு காட்டும் ஒற்றை மாவட்டம்.. சென்னையில் தாறுமாறா எகிறும் பாதிப்பு! மாவட்ட வாரியாக முழுவிவரம்

By karthikeyan VFirst Published Apr 24, 2020, 7:21 PM IST
Highlights

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தாறுமாறாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 52 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
 

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு உறுதியாகும் கொரோனா பாதிப்பில், 50-75 சதவிகிதம் பாதிப்பு சென்னையில் மட்டுமே உறுதியாகிறது. நேற்று தமிழ்நாட்டில் 54 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில் 27 பேர் சென்னை. இன்று 5882 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டதில் 72 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 52 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

நேற்றே சென்னையில் கொரோனா பாதிப்பு 400ஐ எட்டிவிட்ட நிலையில், இன்று 52 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 452ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், சென்னையில் அண்ணாசாலை உட்பட முக்கிய சாலைகள் மூடப்பட்டுவிட்டன. வரும் 26 முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

சென்னைக்கு அடுத்தபடியாக பாதிப்பு அதிகமாகவுள்ள கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளிலும் மதுரையிலும் வரும் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மற்றும் தர்மபுரியில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், கிருஷ்ணகிரி மட்டுமே தமிழ்நாட்டில் கொரோனா தொற்றாத மாவட்டமாக உள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 57

சென்னை - 452

கோவை - 141

கடலூர் - 26

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 5

காஞ்சிபுரம் - 12

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 56

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 55

நீலகிரி - 9

பெரம்பலூர் - 5

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 14

ராணிப்பேட்டை - 39

சேலம் - 30

சிவகங்கை - 12

தென்காசி - 33

தஞ்சாவூர் - 55

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 110

திருவள்ளூர் - 52

திருவண்ணாமலை - 14

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 42

விருதுநகர் - 23.

click me!